தமிழ் சினிமாவில், மிக முக்கிய நாயகியாக இப்போது வளம் வருபவர், கீர்த்தி சுரேஷ். சில வருடத்திற்கு  முன்பு முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ஹீரோயீன் அது கீர்த்தி சுரேஷ் தான் இருப்பார். வுயஜய் சூர்யா என பலர் படங்களிலும் நடித்து சினிமாவில் அசைக்க முடியாத இடத்தினை பெற்றுள்ளவர். முதலில் விக்ரம் பிரபுவின் படத்தில் அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவதுஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

அந்த படம் சுமாரான வெற்றியையும் பெற்றது. அடுத்து நடந்த படம் தான் மிக பெரிய ஹிட்டடித்து அவரை நடிகையாக பிரபலமாகியது. அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது பல ரசிகர்களை தன் கைக்கு வைத்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக வரவேற்பு பெறுவது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இவரது நடிப்பிற்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எந்த ஊருக்கு போனாலும் உடனே ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சிறுபிள்ளைத்தனமாக அவரது இணையதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப் படுத்தி வருகிறார். தற்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் சினிமாவில் குயினாக உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன.தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு கீர்த்தி சுரேஷ் நியூ லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here