Home சினிமா அச்சு அசலா ஐஸ்வர்யா ராயே தான்” எப்டி இப்டி ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ரெண்டு பேரும்...

அச்சு அசலா ஐஸ்வர்யா ராயே தான்” எப்டி இப்டி ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ரெண்டு பேரும் ஒரே மாதிரியா இருக்காங்க…!!

41
0

ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் பிறந்தார்.இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார்.ராய்குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.

ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் “Dating” எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.

2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

இவர்1997ம்ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில்இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.

என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானிய பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஆம்னா இம்ரான் என்று பெண் தான் அது.

சமூக வளைத்தளத்தில் இந்த பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவ, பலரும் இவரை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு வந்தனர். மேலும், ஒரு சிலரோ இவர் ஐஸ்வர்யா ராய் போல தோற்றமளிக்க பிளாஸடிக் சர்ஜரி சர்ஜரி செய்துகொண்டார் என்று கமன்ட் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த ஆம்னா, தான் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் அம்ருதா என்ற பெண் ஒருவரின் டிக் டாக் வீடியோ கடந்த ஆண்டு வைரலானது. இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மலையாளத்தில் ஷேய்க் அப்சல் தயாரிப்பில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் ‘பிக்காசோ’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கூட வெளியானது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here